தேவைப்பட்டால் குடியரசு தலைவரை சந்திப்போம் – அசோக் கெலாட்

சட்டசபையை கூட்ட தேவைப்பட்டால் கவர்னர் மாளிகை மட்டுமல்ல பிரதமர் அலுவலகம் முன்பாக கூட போராட்டம் நடத்துவோம் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறினார்.

ராஜஸ்தானில் தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதால் சட்டசபை கூட்டத்தை கூட்ட உத்தரவிட கோரி கவர்னர் கல்ராஜ்மிஸ்ராவை சந்தித்து கடந்த சில தினங்களுக்கு முன் மனு கொடுத்தார் முதல்வர் அசோக் கெலாட்.

இதன் மீது கவர்னர் முடிவு தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் இன்று சட்டசபை காங். கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடந்தது.

இதில் கலந்து கொண்டு முதல்வர் அசோக் கெலாட் கூறியது, சட்டசபையை கூட்ட விடாமல் பா.ஜ. பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. 

அந்த எண்ணம் ஈடேறாது. ஆட்சியை கலைக்க வேண்டும் என்பது தான் அவர்களின் குறியாக உள்ளது.

சட்டசபையை கூட்ட உத்தரவிட வேண்டும் என கவர்னரை சந்தித்து வலியுறுத்தியுள்ளேன்.தேவைப்பட்டால் ராஷ்டிரபதி பவன் சென்று ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவோம், பிரதமர் அலுவலகம் முன்பாகவும் தர்ணா செய்வோம் என்றார்.

இதற்கிடையே பா.ஜ. மாநில தலைவர் சதீஷ் பூனியா தலைமையில் பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் கல்மிஸ்ராவை சந்தித்து பேசினர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே