இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு சுலவேசி மாகாணத்தில் வெள்ளிக்கிழமை பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 6.2ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் குடியிருப்புகள் இடிந்து விழுந்தன.

அதிகாலை 2.28க்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிகை 35ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 630க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் மின்சாரம், தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. மேலும் சாலைகள், வீடுகள்,உணவகங்கள், அரசு கட்டிடங்கள், மருத்துவமனைகள் ஆகியவை சேதமடைந்துள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே