கோயம்பேடு சந்தை மூலம் 88 பேருக்கு கொரோனா பரவியுள்ளது!

கோயம்பேடு சந்தையால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 88 ஆக உயந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், பாதிப்பு எண்ணிக்கை 2526 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் சில மாவட்டங்களில் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தாலும், சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது.

இதனால் சென்னையில் நேற்று மட்டும் 176 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிப்பு அங்கு 1082 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக ஆசியாவின் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் என்றழைக்கப்படும் சென்னை கோயம்பேடு சந்தையில், கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

ஏற்கனவே கோயம்பேடு சந்தையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81 ஆக இருந்த நிலையில், தற்போது கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய காஞ்சிபுரம் பெருநகர் பகுதியை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால், கோயம்பேடு சந்தையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 88 ஆக உயந்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே