பிரிட்டன் வழியாக சென்னை வந்த 1,088 பேர் கண்காணிப்பு – அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி..!!

பிரிட்டனில் புதிதாக 33 ஆயிரத்து 364 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதனால் இந்தியாவில் உள்ள விமானநிலையங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை விமான நிலையத்தில் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார்.

அதில் பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒரு நபருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்றும்; அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.

இருப்பினும் தமிழக மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அவர் விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை வந்தவருக்கு கொரோனா கண்டறியப்பட்டது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, “10 நாட்களில் பிரிட்டன் வழியாக பல நாடுகளில் இருந்து சென்னை வந்த 1,088பேர் கண்காணிக்கப்படுகின்றனர் . 

அரசின் கண்காணிப்பு தீவிரமாக இருப்பதால் கொரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை” என்றார்.

பிரிட்டன் விமானங்கள் இன்று நள்ளிரவு 11.59 மணி முதல் டிசம்பர் 31 நள்ளிரவு 11.59 மணி வரை இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

உருமாற்றம் பெற்ற வீரியம் மிக்க கொரோனா வைரஸ் பிரிட்டனில் பரவி வரும் நிலையில் பிரிட்டனிலிருந்து 31-ஆம் தேதி வரை இந்தியா வர விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே