தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,870 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,57,697 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் இன்று 61 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,748 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து இன்று 5,859 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,98,366 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 81,793 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 52,12,534 ஆக உள்ளது. 

மேலும், தற்போது 51,583 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே