செப்டம்பர் 7 முதல் புறநகர் ரயில்களை இயக்குவது குறித்து அதிகாரப்பூர்வமான அட்டவணை ஏதும் வெளியிடவில்லை என்று தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள விளக்கத்தில் “புறநகர் ரயில் சேவை தொடங்குவது குறித்து செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது.
தெற்கு ரயில்வே இதுபோன்ற எந்த செய்தியையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
ஊடக நண்பர்கள் இதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.