ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளில் 8 கோடி ரூபாய் மதிப்பில் அழகுபடுத்தும் பணிகள் தொடங்கி இருக்கின்றன, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சி முழுவதும் முக்கிய இடங்களில் மேம்படுத்த நிதி ஒதுக்கி அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன இதன் ஒரு பகுதியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளில் பதிக்கப்பட்ட கற்களை அகற்றி புதிய அலங்காரத்தில் திட்டமிடப்பட்டுள்ளது மேலும் கோவிலுக்குள் தேங்கும் மழை நீரை வெளியேற்ற வசதியாக புதிய வாய்க்கால்கள் அமைக்கப்பட உள்ளன இதற்காக சுமார் 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு இருப்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உயிருக்கு போராடும் 2 வயது குழந்தை : செய்தி எதிரொலியால் உதவ மதுரை ஆட்சியர் உறுதி
- வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்வதற்காக பிரதமர் மோடி வாரணாசி வருகை