அவசரக் காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள் – பிரதமர் மோடி

அவசர காலத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கும் படி மத்திய சுகாதாரத்துறைக்கு மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.

நாடு முழுவதும் கொரோன தொற்றுவின் வீரியம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறைக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:

கொரோனா தடுப்பு நடவடிக்கையை மத்திய சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து கொரோனா தடுப்புநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் அறிவுரை வழங்கி உள்ளார்.

தமிழகம், மகாராஷ்டிரா, டில்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்,ஐ.சி.எம்.ஆர் தலைவர் பல்ராம் பார்கவா ஆகியோரிடம்,நோயாளிகளுக்கான பரிசோதனை , படுக்கைகளின் எண்ணிக்கை மற்றும் பரிசோதனை அதிகரிப்பு உள்ளிட்டவை குறித்து நாளை (14ம் தேதி) அவசர ஆலோசனை நடத்த உள்ளார் என கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே