செய்தி சேனலின் முயற்சியால் தலை வீங்கிய நிலையில் உள்ள 2 வயது பெண் குழந்தை மருத்துவ செலவிற்கு உதவி செய்வதாக மதுரை மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு வந்த ராமசாமி அழகு தாய் தம்பதியினர் அவர்களின் குழந்தையின் பரிதாப நிலை பற்றி மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக் கூறினர் அப்போது நீர்ச்சத்து கோர்த்து தலை வீங்கிய நிலையில் உள்ள தங்களுடைய குழந்தையின் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பதாக அந்த பெற்றோர் கண்ணீர் மல்க கூறினர், குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
- மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் நன்றி
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை வீதிகள்.