தீவிர கண்காணிப்பில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் வந்த 68 பேர் : சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ்

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் அறிகுறியுடன் வந்த 68 பேரை தொடர்ந்து கண்காணித்து வருவதாக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் உயர் அதிகாரிகளுடன் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சீனாவில் இருந்து சென்னைக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்துள்ளதாகவும், அவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டதாகவும் கூறினார்.

அவர்களுள் 68 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தது என்றும்  அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டாலும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களுக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி அறை அமைக்கபட்டுள்ளது என்றும் சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே