நகைச்சுவை நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்..!!

நகைச்சுவை நடிகர் செந்தில், இன்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் மற்றும் பாஜக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.

பிரபல காமெடி நடிகர் செந்தில், அதிமுகவை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்திருந்தார்.

தற்பொழுது செந்தில் ன்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் மற்றும் பாஜக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.

அவருக்கு பொறுப்புகள் கொடுக்க வாய்ப்புள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், விரைவில் பாஜக தமிழகத்தில் கால் பதிக்கும் என்றும், இந்த தேர்தலில் பாஜகவிற்காக பரப்புரையில் ஈடுபடப்போவதாக தெரிவித்த அவர், ஊழலற்ற ஆட்சி நடந்துவருவதால் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே