அதிமுகவின் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், டிடிவி தினகரனை சந்தித்து அமமுகவில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன்.

அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடம் 171 பேர் கொண்ட அதிமுக வேட்பாளர்களின் 2ம் கட்ட பட்டியலை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டனர்.

இதில் 3 அமைச்சர்களை தவிர மீதமுள்ள 27 அமைச்சர்களுக்கும், 45 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சில எம்எல்ஏகளுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து, இன்று அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரனை, சாத்தூர் தொகுதி அதிமுக எம்எஸ்ஆர் ராஜவர்மன் எம்எல்ஏ, சந்தித்தாக கூறப்பட்டது. 

அதிமுகவின் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், தினகரனுடன் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், சாத்தூரில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அதிருப்தியில் இருந்த ராஜவர்மன் அமமுகவில் இணைந்தார். சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் டிடிவி தினகரன் முன்னிலையில் சற்றுமுன் அமமுகவில் இணைந்தார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் மோதலில் ஈடுபட்டு வந்த ராஜவர்மனுக்கு அதிமுகவில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே