விக்ரம் நடிக்கும் “கோப்ரா” – மோஷன் போஸ்டர் ரிலீஸ்

விக்ரம் நடிக்கும் 58-வது படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கடாரம் கொண்டான் படத்தை அடுத்து விக்ரம் நடிக்கும் 58-வது படத்தை இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி வரும் இந்தப் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிகராக அறிமுகமாகிறார்.

இந்நிலையில் இந்தப் படத்துக்கு கோப்ரா என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ChiyaanVikram58 – COBRA

அதனுடன் படத்தின் மோஷன் போஸ்டரும், 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் இந்தப் படத்தின் டைட்டில், மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் விக்ரம் கேரக்டர் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே