#OhMyKadavule : ஓ மை கடவுளே படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம்…

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த ஓ மை கடவுளே படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் காதலர் தினத்தன்று திரைக்கு வந்த படம் ‘ஓ மை கடவுளே’.

காதல், பேண்டசி படமான இதை அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி கடவுளாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்தது. 

இப்படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் விஸ்வக் சென் ஹீரோவாக நடிக்கிறார்.

மேலும், நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் கடவுளாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் அண்மையில் வெளியாகியுள்ளது.

மேலும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது டிவிட்டர் பக்கத்தில், “ஓ மை கடவுளே சூப்பர்… இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் படி நேர்த்தியாக உள்ளது.

இயக்குநர் அஷ்வத் அருமையா பண்ணியிருக்கீங்க, அசோக் செல்வன் நீங்க நேச்சுரலான நடிகர்” என படத்தை வெகுவாக பாராட்டினார்.

இந்நிலையில் தற்ப்போது ஓ மை கடவுளே படம் டொரோண்டோ சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது.

வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை திரையிடப்படும் என்று படக்குழுவினர் சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டனர். .

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே