ஊரடங்கை மீறி ஊர் சுற்றிய நடிகர் சூரி மற்றும் விமல் மீது பாயும் வழக்கு?

கடந்த 17ஆம் தேதி பிரபல நடிகர்கள் விமல் மற்றும் சூரியுடன் இரண்டு இயக்குனர்களும் கொடைக்கானல் நகருக்கு வந்துள்ளனர்.

அத்துடன் வனத்துறையிடம் கட்டணம் செலுத்தி அனுமதி பெற்று செல்லும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பேரிஜம் ஏரி பகுதிக்கு எந்தவிதமான அனுமதியுமின்றி சென்று அங்குள்ள ஏரியிலும் மீன்பிடித்து உள்ளனர்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியான உடன், உள்ளூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர் மகேந்திரன் ஆகியோர் காவல்துறையில் புகார் அளித்ததுடன் வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட வன அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். 

இதையடுத்து விமல், சூரி ஆகியோருக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்ததாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சுற்றுச்சூழல் வனக்காவலர் சைமன் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் அருண், பிரபு ஆகிய தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில்; சூரி, விமல் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய காவல் துறை கண்காணிப்பாளருக்கு கோட்டாட்சியர் கடிதம் வாயிலாக பரிந்துரை செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே