குடியுரிமை திருத்த சட்டம் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் தனது வருடாந்திர தசரா உரையின் போது கடந்த ஒரு வருடத்தில் நடந்த பல்வேறு ‘குறிப்பிடத்தக்க சம்பவங்களை’ பட்டியலிட்டுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது:2019 ஆம் ஆண்டில், 370வது பிரிவு பயனற்றதாக மாறியது, பின்னர் உச்சநீதிமன்றம் நவம்பர் 9 அன்று அயோத்தி தீர்ப்பை வழங்கியது.

முழு தேசமும் தீர்ப்பை ஏற்றுக்கொண்டது.

ஆகஸ்ட் 5, 2020 அன்று, ராமர் கோயிலின் பூமிபூஜை விழா நடைபெற்றது. இந்த நிகழ்வுகளின் போது இந்தியர்களின் பொறுமை மற்றும் உணர்திறனை நாங்கள் கண்டோம்.

இந்த ஆண்டு நாடு பல முன்னேற்றங்களைக் கண்டது. ஆனால், கொரோனா எல்லாவற்றையும் மூடிமறைத்தது. 

குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நாங்கள் கண்டோம், இது நாட்டில் பதற்றத்தை உருவாக்கியது.

இது பற்றி மேலும் விவாதிக்கப்படுவதற்கு முன்பு, இந்த ஆண்டு கொரோனாவில் கவனம் செலுத்தப்பட்டது.

சிஏஏ.,வை பயன்படுத்தி சந்தர்ப்பவாதிகள் போராட்டங்கள் என்ற பெயரில் ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர்.

சிஏஏ எந்தவொரு குறிப்பிட்ட மத சமூகத்தையும் எதிர்க்கவில்லை. ஆனால் இந்த புதிய சட்டத்தை எதிர்க்க விரும்பியவர்கள், நமது முஸ்லிம் சகோதரர்களை தவறாக வழிநடத்தியது; இது முஸ்லிம் மக்களை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்ற தவறான கருத்தை பரப்பியது.

சிஏஏ.,வை பயன்படுத்தி, சந்தர்ப்பவாதிகள் எதிர்ப்புக்கள் என்ற பெயரில் ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே