கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 13ம் தேதி ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக அமைச்சர் துரைக்கண்ணு திண்டிவனம் அருகே முண்டியம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பிறகு அன்று மாலையே சிகிச்சைக்காக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தற்போது அமைச்சர் துரைக்கண்ணு தீவிரி சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அவரின் நுரையீரல் 90% பாதிப்படைந்து உள்ளதால் அவருக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் அந்த மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் துரைக்கண்ணுவின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினர். முதல்வருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உடனிருந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே