நடிகை வனிதா விஜயகுமார் இன்று பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்..!!

நடிகை வனிதா விஜயகுமார் இன்று பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்!

பாஜகவினர் பிரபலங்கள் பலரை தங்களது கட்சியில் சேர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் ராதாரவி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோர் பாஜக கட்சியில் மாநில அளவில் பொறுப்பில் உள்ளனர்.

சமீபத்தில், கூட காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி குஷ்பு பாஜகவில் இணைந்தது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

தற்போது, நடிகை வனிதா விஜயகுமார் அவர்களை பாஜகவில் சேர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் அவர் பாஜக கட்சியில் இணைந்து, வரவிருக்கும் தேர்தல் பிரச்சாரங்களில் களமிறங்கி கலக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வனிதா தரப்பில் இருந்து வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே