குடியுரிமை சட்டம் வாபஸ் கிடையாது – அமித் ஷா

எந்த சந்தர்ப்பத்திலும் குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெற முடியாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டது. ஆனால் இந்த சட்டத்தை எதிர்க்கட்சிகளும், அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்கவில்லை.

வடகிழக்கு மாநிலங்களும், தலைநகர் டெல்லியும் போராட்ட நெருப்பில் தகிக்கின்றன. டெல்லி மாணவர்களின் தாக்குதல் ஜனாதிபதி வரை புகாராக சென்றுள்ளது.

இந் நிலையில் குடியுரிமை சட்டத்தை வாபஸ் வாங்கும் எண்ணமே இல்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். டெல்லியில் ஒரு ஊர்வலத்தில் பேசிய போது அவர் இதனை அறிவித்து இருக்கிறார்.

“மாணவர்களும், இஸ்லாமியர்களும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்த சட்டத்தால் நீங்க பயப்பட வேண்டாம். உங்களின் இந்திய குடியுரிமை பறிபோகாது. எதிர்க்கட்சிகள் உங்களை திசைதிருப்புகின்றன” என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும், இந்த சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரான சட்டமல்ல என்றும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே