இந்த பூமி எவனுக்கும், அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது – கார்த்திக் சுப்புராஜ்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மற்றும் அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு பிரபல திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு வரை இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டமாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இச்சட்டத்தை எதிர்த்து தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இந்தியாவை மதச்சாற்ற நாடாக நீடிக்க வைப்போம் என்றும்; குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு மறுப்பு சொல்வோம் என்றும்; அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு நோ சொல்வோம் என்றும்; இந்த பூமி எவனுக்கும், அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது என்றும் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே