அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு இன்று தாயகம் திரும்புகிறார் ஓபிஎஸ்

துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று தாயகம் திரும்புகிறார்.

கடந்த 7ஆம் தேதி துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அமெரிக்கா சென்றார்.

சிகாகோ, வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

சிகாகோ தமிழ் சங்கம் சார்பாக தங்க தமிழ் மகன் உள்ளிட்ட 6 விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன.

தமிழ்நாடு உட்கட்டமைப்பு மற்றும் உரைவிடம் நிதிக்கு 720 கோடி ரூபாய் முதலீடுகளை திரட்ட ஒப்பந்தம், உலக வங்கியில் தமிழக மேம்பாட்டு திட்டங்களுக்கு தேவையான நிதி உதவி, தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு போன்றவற்றிற்காக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.

மேலும் ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் ஆய்வு இருக்கைக்காக ஓ.பன்னீர்செல்வம் 7 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.

இந்த நிலையில், பத்து நாள் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்காவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் விமானம் மூலமாக பெறப்பட்டார்.

இன்று இரவு 8 மணி அளவில் சென்னை திரும்பும் ஓ பன்னீர் செல்வத்திற்கு அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிட்டிருக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே