பெரியார் குறித்து பாஜகவின் சர்ச்சை ட்வீட்..

பெரியாரை கொச்சைப் படுத்தும் வகையில் பாஜக ட்வீட் போட்டது தவறு என்று அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் சென்னை வண்ணாரப்பேட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானம் வழங்கும் நிகழ்வை அமைச்சர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் பேசுகையில், எம்.ஜி.ஆர் மறைந்து 32 ஆண்டுகள் ஆனாலும் அவரின் புகழ் இன்று குறையவில்லை.

பெரியாரை கொச்சைப் படுத்தும் வகையில் பாஜக ட்வீட் போட்டது தவறு என்று அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆரின் கருத்துகள் இன்னும் 100 ஆண்டுகள் நீடிக்கும். நாங்கள் எல்லாம் இன்று வீரத்தோடு இருப்பதற்கு காரணம் எம்.ஜி.ஆர் தான் என்று கூறினார்.

மேலும் பெரியாரை அவமதிக்கும் வகையிலும் அவதூறு பரப்பும் வகையிலும் பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் போடப்பட்ட பதிவு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், சமூக சீர்திருத்தவாதி பெரியாரை கொச்சைப் படுத்தியது தவறு என்றும் இது கண்டத்திற்குரிய செயல் என்றும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே