சுங்கச்சாவடியில் கட்டணமில்லாததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

செங்கல்பட்டு அருகே அடித்து நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடியில் கட்டணம் ஏதுமின்றி வாகனங்கள் இயக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி செல்லும் எஸ்.ஈ.டி.சி பேருந்து கடக்கும்போது சுங்கச்சாவடி ஊழியர் சுங்கக்கட்டணம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் சுங்கச்சாவடி ஊழியருக்கும் பேருந்து ஓட்டுனருக்கும் வாக்குவாதம் முற்றிப்போய் கைகலப்பானது.

சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதால், ஆத்திரமடைந்த ஓட்டுனர் பேருந்தை சுங்கச்சாவடி குறுக்கே பக்கவாட்டில் நிறுத்தினார்.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட, ஆத்திரமடைந்த சிலர் சுங்கச்சாடியை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

இதில் சுங்கச்சாவடி கட்டுப்பாட்டு அறைகள் முழுவதும் சேதமாகி உள்ளதால் தற்போது கட்டணம் வசூலிக்கப்படாமல் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

சுங்கச்சாவடியை சீரமைக்க ஒரு வாரம் ஆகும் என்பதால், அதுவரை கட்டணம் வசூலிக்கப்படாது என்ற செய்தி வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே