முதல்வர் வேட்பாளர்..; 5 நாளில் பாஜக அறிவிக்கும் – குஷ்பு பேட்டி..!!

அதிமுக – பாஜக கூட்டணி குறித்து ஓரிரு நாளில் முறையான அறிவிப்பு வெளியாகும் என்று செய்தியாளர்களிடம் குஷ்பு தெரிவித்துள்ளார்.

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க பாஜகவை தொடர்ந்து, பாமகவும் மறுப்பது குறித்த கேள்விக்கு, மாநில கட்சியே முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஏற்க மறுக்கிறது எனவும்; கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை தலைமை அறிவிக்கும் எனவும் குஷ்பு பதில் அளித்துள்ளார்.

பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்று கொண்டுள்ளோம்.

முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிப்பது மரபு.

அதிமுக-பாஜக கூட்டணி குறித்து ஓரிரு நாளில் முறையான அறிவிப்பு வெளியாகும். 

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை 5 நாளில் பாஜக அறிவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சமீபத்தில் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜக கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே