டெல்லியில் 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது. மத்திய சுகாதாரதுறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு செய்தார்.

நாடு முழுவதும் இன்று பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு தீவிரமாக உள்ளது.

இந்த நிலையில் டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று தொடங்கியது.

தலைநகர் டெல்லியில் உள்ள ஜிடிபி மருத்துவமனை, தனியார் வெங்கடேஸ்வரா மருத்துவமனை, தியாகர்கஞ்ச் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 3 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ்வர்தன் ஜிடிபி மருத்துவமனைக்கு நேரில் சென்று தடுப்பூசி ஒத்திகை பணியை பார்வையிட்டார்.

தடுப்பூசி வழங்கப்படுவதற்கு முன்னர் பயனாளிகளுக்கு அனைத்து தகவல்களும் வழங்கப்படும்.

எந்தவொரு நபரும் தடுப்பூசிக்கு தீவிரமான எதிர்வினைகளைக் காட்டினால், அவர்கள் மருத்துவமனையின் அவசர வார்டுக்கு மாற்றப்படலாம் என்று ஜிடிபி மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்த்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே