நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்..!!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேட்டியளித்தார். டெல்லியில் மட்டும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் பரவிய கொரோனா 2020 ஆண்டில் உலக மக்களை தன் பிடியில் வைத்திருந்தது.

கடந்த ஆண்டினை கொரோனா ஆண்டு என்று சொல்லும் அளவிற்கு உலகம் முழுவதும் 8,43,48,064 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,0303,409 பேராக உயர்ந்துள்ளது.

கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க நடைபெற்ற ஆராய்ச்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இந்தியாவில் இதுவரை எந்த தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதை மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது என்பதற்கான ஒத்திகை இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது.

தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது.

கொரோனா தடுப்பூசியை குழப்பம் இன்றி விரைவாக கொண்டு சென்று மக்களுக்கு செலுத்துவதை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் இன்று இரண்டு மணி நேரம் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது.

இந்தியாவில் முன்னுரிமை அடிப்படையில், டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், மூத்த குடிமக்கள் என 30 கோடி பேருக்கு முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ஒரு மையத்தில் தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும், என்றார்.

ஓரிரு நாளில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே