ஈரோடு மாவட்டத்தில் ரூ.53.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

ரூ.64 கோடியில் கட்டப்படும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

சூரம்பட்டியில் ரூ.13 கோடியில் வீட்டு வசதி வாரிய அலுவலங்களுக்கும் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

அதுமட்டுமல்லாமல் ரூ.151 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளையும் முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார்.

*ஈரோட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், 151 கோடியே 57 லட்சம் ரூபாயில் புதிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஈரோடு சென்று அடைந்தார்.

*ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று காலை 9.45 மணிக்கு நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.

இந்த விழாவில், பள்ளிக்கல்வித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.21.73 கோடி மதிப்பீட்டில், 13 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்.

*மேலும், ரூ.76.12 கோடி மதிப்பீட்டில் 14 புதிய திட்டப்பணி களுக்கு அடிக்கல் நாட்டி, 4, 642 பயனாளிகளுக்கு ரூ.53.71 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணிகள் குறித்த ஆவணப்படத்தை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்.

*இதனைத் தொடர்ந்து மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத்துறை முதன்மை அலுவலர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

சிறு, குறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர்களுடன் முதல்வர் கலந்தாய்வு மேற்கொள்கிறார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே