குழந்தை சுர்ஜித் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

கடந்த ஐந்து நாட்களாக 80 மணி நேரமாக நடைபெற்று வந்த மீட்பு பணியில் இன்று அதிகாலை 4.40 மணி அளவில் குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டான்.

இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குழந்தை சுர்ஜித் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தற்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தன் இரங்கல் செய்தியை தெரிவித்திருக்கிறார்.

அதில் இரவு பகலாக மீட்பு பணி மேற்கொண்டு அமைச்சர்கள் அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்திருக்கிறார்.

குழந்தை சுர்ஜித்தின் பெற்றோர், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே