உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற்றது என்பது ஸ்டாலினின் மனசாட்சிக்கு தெரியும் : ஆர்.பி.உதயகுமார்

உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற்றது என்பது திமுக தலைவர் ஸ்டாலின் மனசாட்சிக்கு தெரியும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் குடியுரிமை திருத்த சட்டம் தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட பொய் பிரச்சாரத்தை புறம்தள்ளி அதிமுகவுக்கு மக்கள் வாக்களித்து உள்ளதாக கூறிய அமைச்சர் ஆர் வி உதயகுமார் உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே