சென்னை கோயம்பேடு சந்தை நாளை வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு பல தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

பின்னர் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது.

இதற்கு இடையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை வரும் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் விடுமுறை என்றும் அன்று காய்கறி சந்தைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விடுமுறை என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது வியாபாரிகள் தங்கள் முடிவை மாற்றி கொண்டனர்.

மக்கள் நலனை கருத்தில் கொண்டு அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க ஏதுவாக மார்க்கெட் வழக்கம் போல இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே