பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது… 96.04 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் 96.04% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வுகள் கடந்த மார்ச் 4 ஆம் தேதி முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில் பள்ளி மாணவ, மாணவிகளாகவும் தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 30 ஆயிரத்து 654.

பள்ளி மாணவ, மாணவிகளாக தேர்வெழுதியோர் 8 லட்சத்து 15 ஆயிரத்து 442. இதில், மாணவிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்து 881.

மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 79 ஆயிரத்து 561.

பொது பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 63 ஆயிரத்து 424. தொழில் பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 18.

இரு தினங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் இன்று காலை 9.30 மணிக்கு இணையத்தில் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று (ஜூலை 31) வெளியிட்டது. 

மாணவர்களின் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட உள்ளன.

இதேபோல் 12-ம் வகுப்பு மறு வாய்ப்பு தேர்வை எழுதிய மாணவர்களுக்கும் இன்றைய தினமே முடிவுகள் வெளியானது. 

இதில், தேர்ச்சி பெற்றவர்கள் 96.04%. மாணவிகள் 97.49% தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 94.38%. மாணவியர் மாணவர்களைவிட 3.11 % அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகளை WWW.tnresults.nic.in, WWW.dge1.tn.nic.in, WWW.dge2.tn.nic.in ஆகிய இணையதள பக்கங்களில் தெரிந்துகொள்ளலாம்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே