கடலூரில் ரூ.50,000 கோடியில் ஆலை : அமெரிக்க நிறுவன அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

கடலூர் மாவட்டத்தில் 50ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலை நிறுவுவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். 

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஹெல்டா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் கொள்கை ரீதியாக ஒப்பந்தம் செய்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக கடலூரில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலை அமைக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக ஹெல்டா நிறுவனத்தின் தலைவர் புரனேந்து சாட்டர்ஜி மற்றும் நிர்வாக துணை தலைவர் ராபின் முகோபாத்யாய் ஆகியோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

தூத்துக்குடியில் 49 ஆயிரம் கோடி மதிப்பில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கடலூரிலும் புதிய ஆலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே