டெல்லியில் அங்கீகரிக்கப்படாத காலணிகளில் வசிக்கும் 40 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் அமைச்சரவை முடிவுகளை விளக்கினர்.

அப்போது டெல்லியில் அங்கீகரிக்கப்படாத காலணிகளில் வசிக்கும் 40 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க முடிவெடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி உரிமம் வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.

புதிய பெட்ரோல் பங்குகள் திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கோதுமை, பார்லி உள்ளிட்ட தானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இவை தவிர மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே