தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், விருதுநகர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மருத்துவக்கல்லூரியையும் 325 கோடி ரூபாய் செலவில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

325 கோடி ரூபாயில் மத்திய அரசின் பங்காக 195 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும், தமிழக அரசின் பங்காக 130 கோடி ரூபாய் அதாவது 40 விழுக்காடு தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2020 ஆம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு கூடுதலாக 900 மருத்துவ இடங்கள் கிடைக்கும். தமிழகத்திற்கான மருத்துவ இடங்கள் 4 ஆயிரத்து 150 ஆக உயரும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே