கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை தினமும் 2 GB டேட்டா இலவசம் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா லாக்டவுனை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே சட்டசபை தேர்தலும் நெருங்கிவிட்டது.

இந்த நிலையில் அரசு கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரை நாள்தோறும் 2ஜிபி டேட்டா கார்டு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதன் மூலம் 9.69 லட்சம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்கள் பயனடைவர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், இணையவழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ள ஏதுவாக அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கல்வி உதவித் தொகை பெறும் சுயநி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு எல்காட் நிறுவனத்தின் மூலமாக விலையில்லா 2ஜிபி டேட்டா கார்டுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே