காஷ்மீரில் செல்போன் SMS சேவை மீண்டும் செயல்படத் தொடங்கியது

5 மாதங்களாக தடை செய்யப்பட்டிருந்த எஸ்எம்எஸ் சேவை இன்று முதல் மீண்டும் வழங்கப்படுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.

காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்தது.

அதே போல ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க அரசியல் கட்சி தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்ததுடன், இண்டர்நெட் சேவை, மொபைல் எஸ்எம்எஸ் சேவைகளை ரத்து செய்தது மத்திய அரசு.

இதனிடையே காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பும் வகையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட கட்சித் தலைவர்களை மத்திய அரசு படிப்படியாக விடுவித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக தடை செய்யப்பட்டிருந்த எஸ்எம்எஸ் சேவை இன்று முதல் மீண்டும் வழங்கப்படுமென ஜம்மு காஷ்மீரின் முதன்மை செயலாளர் ரோகித் கன்சால் தெரிவித்தார்.

இன்று ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில் அரசின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே