தமிழகம் முதலிடம் பிடித்ததில் சட்டம் ஒழுங்கும் ஒரு பங்குவகித்துள்ளது : டிஜிபி திரிபாதி

நல்லாட்சி பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்ததில் சட்டம் ஒழுங்கும் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளதாக டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.

புத்தாண்டையொட்டி டிஜிபி திரிபாதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2019-ஆம் ஆண்டில் அத்திவரதர் வைபவம், மாமல்லபுரத்தில் பிரதமர் மற்றும் சீன அதிபர் சந்திப்பு, உள்ளாட்சி தேர்தல் போன்ற நிகழ்வுகளில் மக்களின் ஒத்துழைப்போடு காவல்துறை சிறந்த முறையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டதாக பெருமிதம் தெரிவித்தார். 

மேலும் சமுதாய பணிகளுக்கு தொடர்ந்து காவல்துறை முழு ஒத்துழைப்பு வழங்கும் என உறுதி கூறுவதாக திரிபாதி தெரிவித்தார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே