மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு

நடிகை மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் கடந்த 2ம் தேதி நடிகை மீரா மிதுன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தமக்கு எதிராக இருப்பவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு தம் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதாக குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, இதுபோன்ற செய்தியாளர்கள் சந்திப்பை தங்கள் விடுதிகள் நடத்துவதைத் தவிர்க்க வேண்டுமென மீராமிதுனிடம் சம்பந்தப்பட்ட விடுதி மேலாளர் தெரிவித்துள்ளார்.

அதற்கு மேலாளரை மீரா மிதுன், தகாத வார்த்தைகளில் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து விடுதி மேலாளர் அளித்த புகாரின் பேரில் மீராமிதுன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட இரு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே