டெல்லியில் காற்று மாசின் தாக்கம் சற்றே குறைந்துள்ளதாக தகவல்

தலைநகர் டெல்லியில் காற்றின் தரத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அரியானா, பஞ்சாப் போன்ற அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகளால் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

காற்று மாசு தீவிரம் அடைந்ததை அடுத்து அங்கு ஒற்றை, இரட்டைப் படை பதிவெண் வாகனங்கள் இயக்கும் விதி அமலுக்கு வந்தது.

இன்று இரண்டாவது நாளாக அந்த விதி கடைபிடிக்கப்படுகிறது.

கார்கள் இயக்கம் குறைந்ததால், டெல்லியில் காற்று மாசு இன்று சற்று குறைந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியினர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று டெல்லியில் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடானது 411ஆக உள்ளது.

தீவிரம் என்கிற நிலையிலேயே காற்று மாசு தொடரும் பட்சத்திலும், காற்று தரக் குறியீட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே