முதல்வர் பற்றி அவதூறாக பேசியதாக தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் மிக தீவிரமாக நடந்து வருகிறது.

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனுக்கு ஆதரவாக திமுக எம்பி ஆ. ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் முதல்வர் பழனிசாமியையும், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினையும் ஒப்பிட்டு ஆ. ராசா பேசினார்.

ஆ. ராசா தனது பேச்சில் முதல்வரை விமர்சிக்கும் வகையில் சில விஷயங்களை குறிப்பிட்டார்.

இதில் சில கருத்துக்கள் வரம்பு மீறி சென்றதாக புகார் வைக்கப்பட்டது. இணையத்தில் ஆ. ராசாவின் பேச்சுக்கள் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுகவினர் சிலரும் கூட ஆ. ராசா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

திமுகவினர் கண்ணியம் காக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினும் குறிப்பிட்டு இருந்தார். ஆ. ராசாவின் அவதூறு பேச்சுக்கு எதிராக அதிமுகவினர் சார்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யாபிரதா சாஹுவிடம் புகாரளிக்கப்பட்டது.

இந்த நிலையில் முதல்வர் பற்றி அவதூறாக பேசியதாக தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆபாசமாக திட்டுதல், தேர்தல் விதிமீறல், கலகம் செய்ய தூண்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

ராசா மீது இந்த 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக சென்னை கமிஷ்னர் மகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே