வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் இதை கொண்டு வாக்களிக்கலாம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க உபயோகிக்க கூடிய ஆவணங்களை தேர்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக செய்து வருகிறது.

வாக்காளர்களை பட்டியலிட வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. 

அத்துடன் மாநிலங்களுக்கு தேர்தல் பணிகளை கவனிக்கும் தேர்தல் அதிகாரிகளையும் நியமித்துள்ளது.

இதுவொருபுறமிருக்க அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசித்து வருகின்றனர். இதன் பிறகு புயல் வேகத்தில் சூறாவளி பிரச்சாரத்தையும் எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் வாக்காளர் அட்டை இல்லாதோர் புகைப்படத்துடன் கூடிய 11 ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆதார், பான் ,ஓட்டுநர் உரிமம் ,பாஸ்போர்ட், வங்கி கணக்கு உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம்.

அத்துடன் ஓய்வூதிய கணக்கு ,மருத்துவ காப்பீட்டு கணக்கு, 100 நாள் வேலை அட்டை உள்ளிட்டவை மூலமும் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே