மறக்க முடியுமா! இந்த நாளில் அன்று- ஹெர்ஷல் கிப்ஸ் முதன் முதலில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை

நான் பிரையன் லாரா டெஸ்ட் போட்டிகளில் சிலபல சிக்சர்களை விளாசியதைப் பார்த்தேன். அதே போல் நானும் செய்யலாம் என்று நினைத்தேன். இது அந்த நாளாக அமைந்தது” என்றார்.

மார்ச் 16, 2007, பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு மே.இ.தீவுகளில் நடந்த 50 ஓவர் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவின் அதிரடி மன்னன் ஹெர்ஷல் கிப்ஸ் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்த முதல் வீரர் ஆனார்.

நெதர்லாந்து அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் ஹெர்ஷல் கிப்ஸ் சற்றும் எதிர்பாராத விதத்தில் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசினார். முதலில் கேரி சோபர்ஸ் 6 சிக்சர்களை அடித்தது சர்வதேச கிரிக்கெட் அல்ல. அது கவுண்டி கிரிக்கெட், ரவிசாஸ்திரி திலக் ராஜை ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்ததும் உள்நாட்டுப் போட்டியில்.

இந்நிலையில் செயிண்ட் கிட்ஸில் நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியில் நெதர்லாந்து அணிக்காக ஹெர்ஷல் கிப்ஸ் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடித்து சாதனைப் புத்தகத்தில் நுழைந்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே