NPR குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்!

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

மேலும் NPR எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டு பணிக்காக 8,500 கோடி ரூபாய் ஒதுக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதத்துக்குள் அசாம் மாநிலம் தவிர அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேங்களிலும் செய்து முடிக்கப்படும்.

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் அமல்படுத்துவதற்கும் 13 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும் என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் வீட்டிலிலுள்ளவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதுதான் NPR எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு.

இதுபொதுவாக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்படும்.

2021-ம் ஆண்டு இந்த கணக்கெடுப்பு நடைபெறும். அந்தக் கணக்கெடுப்பில், ஒரு பகுதியில் குடியிருப்பவர் அந்தப் பகுதியில் ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேல் குடியிருந்தவரா அல்லது இன்னமும் ஆறு மாதங்கள் அந்த இடத்தில் தங்கி இருப்பாரா என்று கணக்கெடுக்கப்படும்.

NPR-க்கும் NRC -க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பா.ஜ.க விளக்கமளித்து வருகிறது.

முதலில் 2010-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்னர் 2015-ம் ஆண்டு, அந்த கணக்கெடுப்பு அப்டேட் செய்யப்பட்டது.

ஆனால் வரவுள்ள கணக்கெடுப்பில், இதுவரையில் கணக்கெடுப்பின்போது கேட்கப்படாத விவரங்களையும் கேட்கவுள்ளனர்.

பெற்றோர்களின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்தையும் கேட்கவுள்ளனர்.

இந்த விவரங்கள் நாடு முழுதும் அமல்படுத்தப்படுவதாக சொல்லப்படும் NRC – குறித்த முக்கியத்துவத்தை ஏற்படுத்துகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,

  • மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எந்த ஆவணங்களும் கேட்கப்படப்போவதில்லை.
  • குடிமக்கள் உண்மையான விவரங்களை அளிப்பார்கள் என்று அரசு நம்புகிறது.
  • பாஸ்போர்ட், ஆதார் விவரங்கள், ஓட்டுநர் உரிமம் அந்த விவரங்களை விருப்பப்பட்டவர்கள் அளிக்கலாம் என்று தெரிவித்தார்.

மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக அறிவிப்பு வந்த உடனேயே பல மாநிலங்கள் அதற்கான ஆயத்தப்பணிகளைத் தொடங்கிவிட்டன.

ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் எழுந்த நிலையில் மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை நிறுத்திவைத்துள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே