வேலூரில் அரசு விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி, திமுக எம்.எல்.ஏ இடையே கடும் வாக்குவாதம்

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ-வுக்கும், தி மு க அமைச்சருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே சி வீரமணி பங்கேற்றார்.

இந்த விழாவில் கலந்து கொண்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் அரசு விழாவில் தான் புறக்கணிக்கப்படுவதாகவும், தனது மனுவை நிராகரிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் கே சி வீரமணி, திமுக சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த வாக்குவாதம் சிறிது நேரத்திலேயே திமுக அதிமுகவினரிடையே மோதலாக மாறியது.

உடனடியாக இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் மேடையிலிருந்து காவல்துறையினர் கீழே இறக்கினர்.

பின்னர் அமைச்சர் கே சி வீரமணியை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். அதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே