மக்கள் ஆதரவு இல்லாததால் பேரணி நடத்தி அச்சுறுத்த நினைக்கிறது திமுக : கடம்பூர் ராஜூ

திமுகவுக்கு மக்களிடம் ஆதரவு இல்லாததால் தான் பேரணி நடத்தி பயமுறுத்த நினைப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ஆரின் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அறிவிப்புகள் வெளியாகும் என்றார்.

மேலும் குடியுரிமை சட்டத்தில் மாற்றம் வேண்டும் என்றால் அதை நாடாளுமன்றத்தில் பிரதிபளிக்க வேண்டுமே தவிர மக்களை திரட்டி பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவது போல் செயல்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய அரசிடம் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து வலியுறுத்தியதாகவும்; அதுவே ஜனநாயக முறை என்றும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே