#BREAKING : மாணவர்களின் பொங்கல் விடுமுறை ரத்து இல்லை – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

மாணவர்களுக்கான பொங்கல் விடுமுறை ரத்து செய்யப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. 

பொங்கல் விடுமுறை அன்று நடைபெறும் பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சியை பள்ளிகளில் மாணவர்கள் காண்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளளதாக தகவல் வெளியானது.  

ஜனவரி 14-ம் தேதி பொங்கல் விடுமுறை தொடங்கும் நிலையில், 16-ஆம் தேதி நடைபெறும் பிரதமரின் நிகழ்ச்சியை காண அறிவுறுத்தப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு விடுமுறை ரத்தாகும் சூழல் ஏற்பட்டது.

வரும் 16ம் தேதியன்று அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடபடவில்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. 

ஜனவரி 16-ம் தேதி பிரதமர் உரையை எங்கிருந்து வேண்டுமானாலும் தொலைக்காட்சியில் பார்க்கலாம் எனவும்; வீடுகளில் பார்க்க முடியாத மாணவர்களுக்கு விருப்பமிருந்தால், அவரவர் பள்ளிகளில் காண்பதற்காக ஏற்பாடு செய்யவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாவும்; இந்த அறிவிப்பு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் இயக்குநர் கண்ணப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே