திஹார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்திருக்கிறது அமலாக்கத்துறை. திஹார் சிறையில் இரண்டு மணி நேரம் நடந்த விசாரணைக்குப் பிறகு ப.சிதம்பரத்தை கைது செய்து இருக்கிறது அமலாக்கத் துறை.
ஏற்கனவே ப.சிதம்பரத்தை ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி டெல்லியில் இருக்கக்கூடிய அவருடைய இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.
இதனை அடுத்து தொடர்ச்சியாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
குறிப்பாக 500க்கும் மேற்பட்ட கேள்விகளை அவரிடம் கேட்கப்பட்டு, தற்போது சிதம்பரம் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நாளையுடன் அவருடைய நீதிமன்ற காவல் நிறைவடைய இருக்கிறது.
இந்த வார இறுதிக்குள் அந்த ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு தற்போது சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில்தான் தற்போது அமலாக்கத் துறையினர் இதே ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தற்போது சிதம்பரத்தை டெல்லி திகார் சிறையில் தற்போது கைது செய்துள்ளனர்.
நேற்றையதினம் இதுதொடர்பான அந்த மனு மீது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் தன்னுடைய உத்தரவில் சிதம்பரத்திடம் அமலாக்கத் துறைக்கு முழுமையாக விசாரணை நடத்தவும், விசாரணை நடத்திய பிறகு அவரை கைது செய்ய தேவைப்பட்டால் முழுமையாக அனுமதி வழங்குவதாக தெரிவித்தார்.
இதன் அடிப்படையில்தான் சரியாக காலை எட்டு முப்பது மணிக்கு திகார் சிறைக்கு 5 குழுக்கள் கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் வந்தனர்.
3 அதிகாரிகள் சிதம்பரத்திடம் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் இறுதியில் தான் தற்பொழுது அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவரை இங்கிருந்து டெல்லியில் இருக்கக்கூடிய அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
அங்கேயும் அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதை அடுத்த 24 மணி நேரத்தில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரத்தை ஆஜர் படுத்தவும், தற்பொழுது அமலாக்கத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.