சிகரெட் குடோனில் பயங்கர தீ விபத்து

திருவள்ளூர் அருகே ஐடிசி சிகரெட் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சிகரெட் மூலப் பொருட்கள் எரிந்து நாசமாகின.

திருவள்ளூர் மாவட்டம் பண்டிகவானூர் பகுதியில் ஐடிசி சிகரெட் குடோன்கள் உள்ளன. ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்படும் சிகரெட் மூலப்பொருட்கள் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இங்கு உள்ள குடோனில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து நிர்வாகிகள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பொன்னேரி, கும்மிடிப்பூண்டி பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சிகரெட் மூலப்பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இப்பகுதியில் ஏற்பட்ட இடி மின்னல் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே