பிரதமரின் காலில் விழுந்து கிடப்பவர் முதல்வர் பழனிசாமி – ஸ்டாலின்

பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக மத்திய அரசின் காலில் விழுந்து கிடப்பவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து, அத்தொகுதிக்கு உட்பட்ட அம்பலம் என்ற கிராமத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா?? என கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் காலில் விழுந்து கிடந்ததால், அவரால் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி என ஸ்டாலின் குறிப்பிட்டார்.

தற்போது பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி, பிரதமரின் காலில் விழுந்து கிடப்பதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே