தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 ஆம் தேதி அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
வருகிற ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைக்கு மறுநாள் திங்கட்கிழமை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று சனி, ஞாயிறு, திங்கட்கிழமை என தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை விடப்படுகிறது.
திங்கட்கிழமை விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 9ஆம் தேதி வேலை நாள் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.